தங்கம் விலை நிலவரம்
22 கேரட் ஆபரண தங்கம் விலை
பதிவு செய்த நாள் : 02.08.2025
24 கேரட் சொக்கத்தங்கம் விலை
பதிவு செய்த நாள் : 24.07.2025
இந்தியர்கள் ஏன் தங்கம் வாங்குகிறார்கள், தெரியுமா?
இந்தியர்கள் தங்கத்தை ஒரு நகையாக (அ) அணிகலனாக மட்டுமில்லாமல் ஒரு நல்ல முதலீடாகவும் பார்க்கிறார்கள். தங்கத்தை நகையாக, தங்க காசுகளாக, தங்க கட்டிகளாக, நாணயமாக மேலும் சிலர் தங்கத்தை டிஜிட்டல் தங்கமாகவும் வாங்குகிறார்கள். இந்தியர்கள் பெரும்பாலும் விசேஷசநாட்கள், பண்டிகைக்காலங்களில் தங்கம் வாங்குவதை பழக்கமாக வைத்திருப்பர். தங்கத்தின் விலை தாறுமாறாகா ஏறினாலும் தங்கம் வாங்குவது மட்டும் குறைவதில்லை. அதற்கான காரணங்களைக் காண்போம்.
1. தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடு.
2. திருமணம் மற்றும் எதிர்கால சேமிப்பிற்கான முக்கிய முதலீடு
3. எளிதாக பணமாக மாற்றவும் முடியும்
4. பெண் குழந்தைகளுக்கான சிறந்த முதலீடு
5. நடுத்தர குடும்பத்தினருக்கு எளிய வர்த்தக முதலீடு
.
எந்த நாள், தங்கம் வாங்க சிறந்த நாள்?
எந்த நாளில் தங்கம் வாங்கினாலும் அது நமக்கு செல்வத்தைதான் கொண்டுவரும். ஆனால் குறிப்பிட்ட இந்த நாளில் வாங்கினால் தங்கம் இரட்டிப்பு செழிப்பைத் தரும் என நம்பப்படுகிறது. ஆமாங்க, தங்கம் வாங்க மிகவும் உகந்தநாள் வியாழக்கிழமை. செல்வ செழிப்பைக் கொடுக்கும் லட்சுமி தேவி வியாழக்கிழமையில் பிறந்ததாக கூறப்படுகிறது. மேலும், பூச நட்சத்திரத்தின் அதிபதியாக வியாழன் இருப்பதால், வியாழன் அன்று பூச நட்சத்திரம் வரும் நாளில் தங்கம் வாங்கினால் அது நல்ல பலனைத் தரும்.
.